Posts

Showing posts from May, 2024

எந்த இடத்திலும் அல்ஜிப்ரா என்ற வார்த்தையே சொல்லாதீர்கள்.

"அல்ஜிப்ராவை எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்துவது ? “  ரொம்ப சிம்பிள். இந்த டெக்னிக்கை செய்து பாருங்கள்.  உங்கள் வீட்டு சிறாருக்கு Ascending Order மற்றும் Descending Order நன்றாக தெரியுமா?  Ascending Order என்றால் சிறியதில் இருந்து பெரியதற்கு வரிசைப்படுத்துவது.  O, 8, 6 , 5 என்ற எண்ணை Ascending Order யில் எழுது என்றால் அதை 0,5,6,8 என்று எழுத வேண்டும்.  Descending Order  என்றால் பெரியதில் இருந்து சிறியதை நோக்கி வரிசைப்படுத்துவது. O, 8, 6 , 5 என்ற எண்ணை Descending Order யில் எழுது என்றால் அதை 8,6,5,0 என்று எழுத வேண்டும்.  இந்த இரண்டும் நன்றாக செய்யும் மாணவரிடம் இது போல சில கணக்குகளை கொடுங்கள்.  அவர் உற்சாகமாக செய்வார்.  அடுத்து N, N+1 , N+5 , N-3, N - 4 என்று எழுதி அதை அசெண்டிங் மற்றும் டிசண்டிங் ஆர்டரில் எழுத சொல்லுங்கள்.  இதுவரை எண்களையே தன்னம்பிக்கையாய் எழுதிக் கொண்டிருந்தவர்கள் லேசாக திகைப்பார்கள்.  இப்போது பேனாவை எடுத்து  N N+1 N+5 N-3 N-4 என்று எழுதிக் கொள்ளுங்கள்.  “சரி இப்ப  N எங்க எல்லாம் இருக்கோ அங்க...